Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் தத்துவம்
பிரச்னை வரும் போது பிறர் முதலில் இறங்கி வரட்டும் என எண்ணாமல் நீங்களே பேச்சை துவக்குங்கள்.
பேச்சிலும் நடத்தையிலும் பண்பற்ற வார்த்தைகளையோ, தேவையற்ற மிடுக்கையோ காட்ட வேண்டாம்.
பிறருக்கு தொடர்பு இருந்தாலும்
இல்லாவிட்டாலும் அவர்களிடம் எல்லா விஷயங்களையும் சொல்லாதீர்கள்.
நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று பிறரிடம் வாதம் செய்யாதீர்கள்.
உங்களையே எப்போதும் உயர்வாக நினைத்து கர்வப்படாதீர்கள்.
மற்றவர் எண்ணம், பேச்சு, செயல்களை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் வதந்திகளை பரப்பாதீர்கள்.
வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.
வாழ்க வளமுடன் என ஒருவரை ஒருவர் வாழ்த்தினால் பலவீனம் நீங்கி வளர்ச்சிக்கான கதவு திறக்கும்.
Comments
Post a Comment