Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி

இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு பிளாக்கினை ஆராம்பித்ததும் முடியாது மேலும் இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பதே ஒரு கடினமானது என்று தான் செல்ல வேண்டும்.
ஒரு முறை எனது மாமாவிடம் பிளாக் ஆராம்பித்திருப்பதை பற்றி பேசும் போது அதிலிருந்து வருமானம் வருமா என்று கேட்டார். அதன்பின் நான் சில இணையதளங்களை தேடிய போது அதில் செல்லி உள்ளவைகளை ஆராயந்ததில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போன்றது தான். சரி விசயத்திற்கு வருவோம்.

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இணையத்தில நீங்கள் ஒரு பிளாக் ஆரம்பித்தால் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூகுளே தெரிவிக்கின்றது.

ஆனால் கூகுள் ஆட்சென்ஸ் தமிழ் பிளாக்குகளுக்கு கிடையாது.

நீங்கள் ஆங்கிலத்தில் பிளாக் ஆரம்பித்தால் அவர்களே எவ்வாறு கூகுள் ஆட்சென்ஸ் உங்களது பிளாக்கிற்கு ஆரம்பிப்பது என்று தெரிவிக்கிறார்கள் அதன்படி செயல்பட்டு அவர்கள் தரும் விளம்பரங்கள் அவர்களே உங்களது பிளாக்கில் பதிவேற்றுகிறார்கள். சரி இவ்வாறு செய்தால் வருமானம் வருமா என்றால் கீழே உள்ளவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
1) உங்கள் பிளாக்கிற்கு அதிக டிராப்பிக் இருக்க வேண்டும் இருந்தால் தான் ஆட்சென்ஸ் விளம்பரம் கொடுப்பதை பற்றி கூகுள் பரிசீலிக்கும்.
2) நீங்கள் வாரம் இரண்டு முறையாவது பிளாக்கில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.
3) உங்களுக்கு கொடுக்கும் விளம்பரங்களை எந்த காரணம் கொண்டும் நீங்கள் கிளிக் செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டு விடும்.
மேற்கண்டாறு உங்கள் பிளாக்கினை ஆரம்பித்ததும் உங்கள் பிளாகிற்கு வரும் பார்வையாளர்கள் உங்கள் பிளாக்கில் உள்ள விளம்பரத்தினை கிளிக் செய்தால் .00வில் டாலராக குறிப்பிட்ட தொகை கிடைக்கும் அந்த தொகை 100 டாலராக சேர்ந்த பின் நீங்கள் தெரிவித்துள்ள முகவரிக்கு கசோலை அனுப்பப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
இதன்படி தான் சொன்னேன் இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது கடினம் என்று. ஏனெனில் உங்கள் பிளாக்கிற்கு வரும் நூறு பேரில் ஒருவர் இணையத்திற்கு புதியவர் தான் பிளாக்கில் எதை கிளிக் செய்ய வேண்டும் என்று தெரியாமல் விளம்பரத்தினை கிளிக் செய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே சும்மா இருந்துக் கொண்டே இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது கனவே ஆகும். எனவே இணையத்தில் பணம் சம்பாதிக்க இன்று புழக்கத்தில் உள்ள கணிப்பொறி மொழியினை கற்று அதன் மூலம் பிராஜக்ட் செய்து பணம் சம்பாதிக்கலாம்.

ஊதியம் என்பது உழைப்பில்லாமல் வராது.

ஆனாலும் முடியாதது எதுவும் இல்லை முயற்சி செய்யவும்.

Comments

  1. இணையத்தில் பணமீட்டுவதற்கான வழிகள் எமது தளத்தில்.. PTC மூலம் யாரும் இலகுவாய் பணமீட்டலாம்..

    ReplyDelete
  2. முடியாது என்று எதுவுமில்லை நண்பரே. முயன்றால் கூகுள் ஆட்சென்ஸ் நிச்சயம் பலன் தரும்.\
    http://www.thangavarthagam.in

    ReplyDelete
  3. கூகிள் ஆடசென்ஸ் சிறந்தது தான். அது போல டேட்டா என்ட்ரி வேலைகளும் நல்ல வழிதான்.. நேரம் கிடைத்தால் படித்து பாருங்க
    http://tamilword.blogspot.in/2012/06/blog-post_13.html

    ReplyDelete
  4. கூகுள் ஆட்சென்ஸ் எப்படி இணைவது என்று தெரியவில்லை ?
    பணம் பிளாக் யவளு இருக்கிறது என்று பார்ப்பது எப்படி ?சொல்லுக
    மை செல் :7708080738

    ReplyDelete

Post a Comment

Popular Posts