Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

திருக்குறள்

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவர். இவர் தமிழ்நாட்டில் பிறந்தவர் இவரது

பிறப்பினை கொண்டு திருவள்ளுவராண்டு கடைபிடித்து வரப்படுகிறது.

திரு + குறள் - சிறப்பு பொருந்திய குறுகிய இரண்டு அடிகளால் ஆன நூல். திரு - சிறப்பு

அடைமொழியாகும்.

இந்நூல் கீழ்க்கண்ட பிரிவுகள் கொண்டதாகும்.

1. அறத்துப்பால்

2. பொருட்பால்

3. காமத்துப்பால்

அறத்துபாலில் 38 அதிகாரங்களும்,பொருட்பாலில் 70 அதிகாரங்களும், காமத்துப்பாலில் 25

அதிகாரங்களும் உள்ளன. ஓரதிகாரத்திற்குப் பத்துப் பாடல்களாக 133 அதிகாரங்களும், 1330

குறப்பாக்களும் கொண்டுள்ளது.

இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

திருக்குறள் கீழ்க்காணும் பெயர்களால் வழங்கப்படுகிறது.

1. முப்பால்

2. உத்தரவேதம்

3. தெய்வநூல்

4. பொய்யாமொழி

5. வாயுறை வாழ்த்து

6. தமிழ்மறை

7. பொதுமறை

இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் அவர்களுக்கும் கீழ்க்கணும் பெயர்கள் உண்டு

1. முதற்பாவலர்

2. தெய்வப்புலவர்

3. பொய்யில் புலவர்

இவர் காலம் கி.மு.31 என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் இயற்றிய திருக்குறள்களை ஒவ்வொன்றாக இதில் வரும் நாட்களில் காணலாம்.

Comments

Popular Posts