Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

தமிழ்த்தாய் வாழ்த்து

நாம் எல்லோரும் படிக்கும் போது தான் இந்த தமிழ்த்தாய் வாழ்த்து நினைவில் இருந்திருக்கும் மறந்தவர்களுக்காக இங்கே பதிவு செய்துள்ளேன்.

தமிழ்த்தாய் வாழ்த்து


நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்,

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து

செயல்மறந்து வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!




இதனை இயற்றியவர் - 'மனோன்மணீயம்' பெ. சுந்தரம் பிள்னள

Comments

Popular Posts