Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

குழந்தைகள் நலம்

அதிகமாக காய்சலாக இருக்கும் குழந்தைக்கு அவர்களின் ஆடைகளை களைந்து நல்ல டவுலினை தண்ணீரில் நனைத்து உடம்பினை துடைத்து விட வேண்டும்.

பின்னர் தொ்மா மீட்டர் கொண்டு அவர்களின் காய்ச்சலின் அளவினை குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் தங்களிடம் கைவசம் உள்ள காய்ச்சல் மருந்தினை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். மேலும் காய்ச்சல் வருவதற்கு முன் என்ன உணவுவகைள் குழந்தைக்கு கொடுக்கப்பட்டது என்பதினையும் குறித்து மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏழு நாட்கள் வரை பேதியாகும் தொடர்ந்து டாக்டர் கொடுக்கம் மருந்தினை கொடுத்து வரவேண்டும்.

கைக்குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் ஐஸ்கிரிம் ஸ்டிக்கினால் (மரத்தினால் ஆனது) எடுத்து ஊட்டினால் நமக்கும் ஊட்டுவது எளிது பாப்பாவுக்கும் சாப்பிட எளிது.

பிறந்து சில நாட்கள் ஆன் குழந்தை அளவுக்கதிமாக தூக்கத்தில் பால் சாப்பிட்டு வயிறு உப்பிவிடும் இதற்கு பயப்பட வேண்டாம் இரண்டு இளம் பெரிய வெற்றிலையாக எடுத்து விளக்கெண்ணெய் ஒரு பக்கம் தடவி லேசாக சூடாக்கி (மிக மிக மெல்லியதான அளவு) வயிற்றின் மீது போட உப்பசம் குறையும்.

சிறு குழந்தைகளுக்கு வயிறு உப்பசமாக இருந்தால் காய்ந்த திராட்சை 10 போட்டுக் கொதிக்க வைத்து கசக்கிப் பிழிந்து வழகட்ழக் கொடுத்தால் வயிறு உப்பசம் குறைந்து விடும்.

சிறு குழந்தைகள் கீழே விழுந்து நெற்றியில் வீங்கிக் கொண்டு விட்டால் வீங்கிய இடத்தில் இரண்டு மூன்று முறை மண்ணெயைப் போட்டால் சரியாகிவிடும்.

சிறு குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க ஆரம்பி்க்கும் போது மஞ்சள் கருவை மட்டுமே கொடுங்கள் வெள்ளை பாகத்தினால் அலர்ஸஜிவரலாம்.

Comments

Popular Posts