Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

சிந்தனை துளி

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.
-பெஞ்சமின்

கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம் கடனில் மூழ்கினால் சொத்தை இழக்கலாம்.

ஒவ்வொரு பொருளின் விலையும் தெரிந்திருக்கலாம் ஆனால் அந்தப் பொருளின் சரியான மதிப்புத் தெரியாமல் இருந்தால் பயனில்லை.
-ஆஸ்கார் ஒயில்டு

உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள் பணத்தை நம்பிக் கையான இடத்தில் வையுங்கள்.

நல்லவராய் இருப்பது நல்லது தான் ஆனால் நல்லது கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.
-பொ்னாட்ஷா

செய்து முடிக்கப்பட்ட மாபொரும் சாதனைகள் அனைத்தும் டிசய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப்பட்டவைகள் தான்.
-கால்லைல்

யார் ஒருவன் தனக்கு உள்ள கௌரவமும் மரியாதையும் போய் விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தைத்தான அடைகிறான்.
- விவேகானந்தர்.

நீங்கள் உங்களைச் சாதாரணமானவர்களாக கருத வேண்டாம். ஏனென்றால் இந்த உலகமே உங்களுடைய தேவைக்காக அல்லவா விரிந்து கிடக்கிறது.
- எர்ஷியன் பழமொழி

நீ யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய் என்பதை ரொம்ப நுணுக்கமாய் கண்டுபிடிப்பதில் இறங்காதே.
-நீஷே

பிறரைப்பற்றி அவதூறாகப் பேசுவது எள்ளி நகையாடுவது மற்றோரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுவது இவற்றை விட்டு விடுங்கள் பிறர் மனதை நோகடிப்பதை விட
பெரிய பாவம் வேறொன்மில்லை.
- சத்ய சாயிபாபா

Comments

Popular Posts