Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

நுகர்வோரின் பாதுகாப்பு

நுகர்வோர் என்பவர் யார்?
பொருட்களையோ அல்லது சேவைகளையோ விலை கொடுத்தோ, வாக்குறுதி கொடுத்தோ வாங்குபவரை நுகர்வோர் என்கிறோம்.

நுகர்வோரின் உரிமைகள்

1. பாதுகாப்பு உரிமை

2. தகவல் பெறும் உரிமை

3. தோ்ந்தெடுக்கும் உரிமை

4. முறையிடும் உரிமை

5. குறைதீர்க்கும் உரிமை

6. தூய்மையான நலம் பயக்கும் சுற்றுசூழலுக்கான உரிமை

7. அடிப்படை தேவைகளுக்கான உரிமை

நுகர்வோரின் கடமைகள்

விழிப்புணர்வோடு இருத்தல்

தேவைக்கு அதிகமான நுகர்வை தவிர்த்தல்

தவறு செய்யும் உற்பத்தியாளர்கள் வணிகர்கள் பற்றி புகார் செய்தல்

பொருட்களையும் சேவைகளையும் முறையாக பயன்படுத்துதல்

சுற்றுச்சூழல் குறித்து பொறுப்புணர்வு

பொருட்களின் ரகங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ரசீதுகள், உத்திரவாதங்கள், தகவல் அறிக்கைகள் அனைத்தையும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்

பிரச்சனை என்று வந்த உடனயே அதனை விற்பனையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

உத்திரவாத அட்டையில் விற்பனையாளரின் முத்திரை மற்றும் கையொப்பத்தைப் பெற வேண்டும்

பொருட்களுக்காக வாழாமல், வாழ்க்கைக்குத் தேவையான பொருள் மட்டும் வாங்க வேண்டும்

மேலும் நுகர்வோரின் ஆலோசனை பெற கீழ்க் காணும் அலுவலகத்தை அணுகவும்

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
4வது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை.5.

Comments

Popular Posts