Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

சமையல் குறிப்புகள்

பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம்.

இட்லி கெட்டியாக இருக்கிறதா?

நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து அதற்குப்பின் வார்த்துப் பாருங்கள் இட்லி மிருதுவாக இருக்கும்.

டீ சுவையாக அமைய : எப்போதும் சர்க்கரை சேர்ந்த பாலில் டீ டிகாக்ஷனை வடிகட்டுங்கள். அப்போதுதான் டீ நல்ல நிறமாக அமையும். நீர்த்துப் போகாமலும் இருக்கும்.

துவரம் பருப்பு வேகவைக்கும் போது பருப்புடன் ஒரு டீஸ்புன் வெந்தயத்தையும் கலந்து வேகவைத்தால் சாம்பார் இரவு வரை ஊசிப் போகாமல் இருக்கும் உடம்புக்கும் நல்லது.

காய்கறி மற்றும் கீரை வகைகளை வதக்குவதை விட கூட்டாகச் சமைப்பதில் வைட்டமின் சத்துக்கள் வீணாவதில்லை.

பாகற்காய் பொரியல் செய்யும் பொழுது முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு கீரையைப் பொடியாக நறுக்கி, பாகற்காயுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டுப் பாருங்கள். சிறிது கூட கசக்காது, கீரையும் பாகையும் சேர்ந்து நல்ல மணமாகவும் இருக்கும்.

Comments